பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான் கான். இவரது நடிப்பில் கடந்த மார்ச் மாதம் சிக்கந்தர் படம் வெளியானது. இந்த படத்தினை ஏ ஆர் முருகதாஸ் இயக்கினார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது.

இதைத்தொடர்ந்து அடுத்ததாக சல்மான் கான் ராணுவ அதிகாரியாக புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை அபூர்வா லக்கியா இயக்க உள்ளார். இதற்கிடையில் நடிகர் சல்மான் கான் வயதாகியும் இன்னும் திருமணம் செய்யவில்லை. பல 100 கோடிக்கு மேல் சொத்துக்களை வைத்திருந்தும் திருமணம் விஷயத்தில் ஆர்வம் காட்டவில்லை.

இந்நிலையில் சல்மான் கான் தி கிரேட் இந்தியன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது கூறிய அவர் தனக்கு இருந்த விவாகரத்து பயம் திருமணத்திற்கு ஒரு தடையாக இருப்பதாக கூறினார். இதனால் தான் 59 வயதிலும் தனிமையில் இருக்க முடிவு செய்தேன் என்று கூறினார்.