
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சல்மான்கான் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் சிக்கந்தர் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் சல்மான்கான் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு நிகழ்ச்சியை நடத்துவதாக இணையத்தில் செய்திகள் உலா வந்தது. ஏற்கனவே சல்மான்கான் இது போன்ற தகவல்களை நம்ப வேண்டாம் என ரசிகர்களிடம் கூறியுள்ளார்.
சல்மான்கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது, சல்மான் கான் அல்லது அவருடன் இணைந்து நிறுவனங்களோ குழுக்களும் அமெரிக்காவில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யவில்லை அந்த நிகழ்வுகளை ஊக்குவிக்கும் மின்னஞ்சல்கள், செய்திகள், விளம்பரங்கள் எதையும் நம்ப வேண்டாம். சல்மான்கானின் பெயரை மோசடி நோக்கங்களுக்காக தவறாக பயன்படுத்துபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார். அந்த பதிவு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
View this post on Instagram