உலகநாயகன் கமல்ஹாசன் 1954-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஏழாம் தேதி பிறந்தார். இவளது தந்தை டி சீனிவாசன் வழக்கறிஞர் ஆவார். தாயார் ராஜலட்சுமி. இவரது சகோதரர் சாருஹாசன் 1980-களில் திரைப்படங்களில் நடித்து வந்தார். சகோதரி நளினி பரதநாட்டிய கலைஞர் ஆவார். தந்தையின் விருப்பப்படி கமல்ஹாசன் திரைப்படத்துறையிலும், நடனத் துறையிலும் ஈடுபாடோடு இருந்தார்.

கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். நடிகராக மட்டுமில்லாமல் திரை கதை ஆசிரியர், இயக்குனர், பாடலாசிரியர், பின்னனி பாடகர், நடன அமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் கமல்ஹாசன். கமல்ஹாசன் 1960-ஆம் ஆண்டு தமிழில் வெளியான களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். இந்த படத்தில் நடித்ததற்காக கமல்ஹாசனுக்கு ஜனாதிபதி விருது வழங்கினார்.

குழந்தை நட்சத்திரமாக கமலஹாசன் 6 படங்களில் நடித்துள்ளார். தங்கப்பன் அவர்களிடம் கமல்ஹாசன் துணை நடன ஆசிரியராக வேலை பார்த்துள்ளார். கடந்த 1973-ஆம் ஆண்டு கைலாசம் பாலச்சந்தரின் இயக்கத்தில் வெளியான அரங்கேற்றம் திரைப்படத்தின் மூலம் கமலஹாசன் கதாநாயகனாக நடித்தார். முன்னதாக கன்னியாகுமரி என்ற மலையாள திரைப்படம் தான் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம்.

இந்த படத்திற்காக கமல்ஹாசன் முதல் பிலிம்பேர் விருதை வென்றார். கமல்ஹாசன் தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம் ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை கமலஹாசன் நடத்தி வருகிறார். கமல்ஹாசன் மாறுபட்ட வேடங்களை ஏற்று நடிப்பதில் வல்லவர் என்பதில் ஐயமில்லை.