
ஆந்திர மாநிலம் கர்னூலில் ராஜேஸ்வரி என்பவர் வசித்து வருகின்றார். இவர் துணை முதல்வர் மந்திரி பவன் கல்யாண் தீவிர ரசிகை ஆவார். மேலும் அவருடைய கட்சியிலும் உறுப்பினராக உள்ளார். இந்நிலையில் அவரை சந்திப்பதற்காக சைக்கிளில் செல்ல முடிவு செய்த ராஜேஸ்வரி கர்னூரில் இருந்து குண்டூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு 487 கிலோமீட்டர் தூரம் உள்ளார். அங்கு சென்று பவன் கல்யாணை சந்திக்க சைக்கிள் பயணத்தை ராஜேஸ்வரி நேற்று தொடங்கியுள்ளார்.
மேலும் அவருடைய சைக்கிளின் முன்பு பவன் கல்யாண் போஸ்டர், படங்கள், கட்சி கொடிகள் உள்ளன. அதோடு தனியாக சைக்கிளில் பயணம் செல்லும் பெண்ணின் துணிச்சலை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர். இதனைப் பார்த்த பவன் கல்யாண் சைக்கிள் பயணம் வரும் பெண்ணிற்கு வாழ்த்து தெரிவித்ததோடு கட்சி தலைமையாகத்திற்கு அப்பெண் வரும்போது அவருக்கு மாலை அணிவித்து பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அதோடு சைக்கிள் பயணம் வரும் இடங்களில் கட்சி தொண்டர்கள் அவருக்கு வரவேற்பு அளித்து உதவி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.