
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணம் சமீபத்தில் சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்த திருமணத்திற்கு சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் பங்கேற்றனர். அந்தத் திருமணத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் நடிகர் விஜய் பங்கேற்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது பெற்றோர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். மேலும் அவரது கட்சி சார்பில் ஆதவ் அர்ஜுனா கலந்து கொண்டார். இதனை அடுத்து அந்த திருமண வரவேற்பில் சுமார் 25 ஆயிரம் பேருக்கு மேல் கலந்து கொண்டதால் அப்பகுதி முழுவதும் நகர முடியாத அளவிற்கு கூட்டம் இருந்தது.
இதற்கிடையில் நடிகர் விஜய்யும் கலந்து கொண்டால் அப்பகுதி முழுவதும் கூட்டம் அலைமோதும் அதனால் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் தவிர்ப்பதற்காக அவர் வரவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் மற்றும் மருமகனுக்கு தனது வீட்டில் ஒரு நாள் ஸ்பெஷலாக விருந்து வைப்பதாக தெரிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.