இந்தியாவில் மக்கள் மத்தியில் கோவிட் தொற்றுக்கு பிறகு இன்றைய விலைவாசி உயர்வு கவலையை தருகிறது. குறிப்பாக காய்கறி, பருப்பு, எண்ணெய் போன்ற பொருட்களின் உயர்வு கட்டுப்பாடு காலங்களில் கிடு கிடு என அதிகரித்து மக்களை வாட்டி வதைக்கும் .ஆனால் குங்குமப்பூ, ஹிமாலயன் காளான் மற்றும் டிராகன் பழம் போன்றவை பொதுவாகவே ஆடம்பர உணவாக பார்க்கப்படும். அப்படி தான் ஹோப் ஹூட்ஸ் என்னும் காய்கறி தான். உலகில் மிக உயர்ந்த காய்கறியாக பார்க்கப்படுகிறது. நாம் இந்த காயின் விலை தங்கம் வைரம் விலையை விட ஜாஸ்திதான். அப்படி என்ன அதன் விலை?  லட்சம் ரூபாய் இருக்குமா? என கேட்டால் அதற்கு பதில் ஆம் என்பது தான் நிதர்சனம்.

இது ஒரு கிலோ சுமார் ரூபாய் 85 ஆயிரத்திலிருந்து 1 லட்சம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. இந்த காய் ஐரோப்பிய நாடுகளில் பிரபலமானது. மருத்துவ குணங்களுக்கு பெயர் பெற்ற இந்த காய்கறி பொதுவாக இந்தியாவில் பயிரிடப்படுவதில்லை. எனினும் முதலில் இது இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஒரு சிறிய பண்ணையில் வளர்க்கப்பட்டதாக சில தகவல்கள் கூறுகின்றன. இதனிடையே பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அம்ரிஷ் சிங் என்ற விவசாயி ரிஸ்க் எடுத்து ஹூப் ஷூட் காய்கறிகளை விளைவித்தார்.

இந்த காய்கறிகளை வளர்த்து கடினமான உடல் உழைப்பும் கவனிப்பும் தேவை. இதன் காரணமாகவே இந்த காய்கறி இவ்வளவு விலை உயர்வாக விற்கப்படுகிறது. இவற்றை வளர்க்க மூன்று ஆண்டுகளாகும். மேலும் அறுவடை செய்யும் வரை தினமும் பராமரிக்க வேண்டும். இந்த காய்கறியில் முக்கியத்துவம் வாய்ந்த விட்டமின்கள் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதை சாப்பிடுவதால் காச நோயிலிருந்து நிவாரணம் கிடைப்பதுடன் கவலை, தூக்கமின்மை, மன அழுத்தம் கவன குறைவு, அதிக செயல்பாட்டு கோளாறு போன்ற நோய்களை குணப்படுத்த முடியும் என்கிறார்கள் நிபுணர்கள்.