கோவை மாவட்டம் சாய்பாபா காலனி பகுதியில் வசிப்பவர் விஷ்ணு ராம். சைக்கிலிஸ்ட் ஆன இவர் பெண் குழந்தைகளின் கல்வி வலியுறுத்தும் விதமாக சைக்கிள் பயணம் மேற்கொண்டு இருந்தார். பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவும் விதமாக இவர் மேற்கொண்ட சைக்கிள் பயணம் ஆனது மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது பெண் குழந்தைகள் கல்வி மற்றும் அதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாகவும், நாடு முழுவதும் நான்கு திசைகளை இணைக்கும் விதமாக ரவுண்ட் ட்ரிப் முறையில் கார் பயணத்தை மேற்கொண்டார்.

இந்த பயணத்தை ஆரம்பித்த இவர் இந்தியாவின் கிழக்கு பகுதியை நோக்கி அருணாச்சல மாநிலம் தேஜஸ் சென்றார். அதன் பிறகு லடாக் குஜராத் மாநிலம் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று மீண்டும் ஜூன் ஏழாம் தேதி சென்னைக்கு வந்தார். மொத்தம் பத்து நாட்கள் மற்றும் 16 மணி நேரத்தில் விஷ்ணு ராம் இந்தியாவை வலம் வந்துள்ளார். மிகக் குறைந்த நேரத்தில் இந்தியாவின் நான்கு எல்லைகளையும் கார் பயணத்தில் சென்ற முதல் இந்தியர் என்று பெருமையை இவர் பெற்றுள்ளார். இவருடைய சாதனை உலக சாதனை புத்தகமான வேர்ல்ட் ரெக்கார்ட் யூனியன், ஏசி புக் ஆப் ரெக்கார்ட், இந்தியா புக் ஆப் ரெகார்ட் ஆகியவை அங்கீகரித்துள்ளது.

மேலும் இவர் இந்த பயணத்தின் மூலமாக 6 லட்சம் நிதியை திரட்டியுள்ளார். அந்த நிதியை மாநகராட்சி பள்ளிகளில் வகுப்பறை கட்டவும், பெண் குழந்தைகளுடைய கல்விக்காகவும் மாவட்ட ஆட்சியரிடம் காசோலையாக ஒப்படைத்துள்ளார்.