கடந்த வருடம் கோவை மாநகரில் லூலு ஹைப்பர் மார்க்கெட் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனமானது ஏற்கனவே கேரளா மற்றும் பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் தன்னுடைய கால் தடத்தை பதித்துள்ளது. இதற்கிடையில் தமிழ்நாட்டில் ஹைப்பர் மார்க்கெட், மால் அமைக்கும் பணிகளையும் இந்த நிறுவனம் தொடங்கியுள்ளது. கோவை லட்சுமி மில்ஸ் வளாகத்தில் சுமார் 1.20 லட்சம் சதுர அடியில் மிகப் பிரமாண்டமாக ஹைப்பர் மார்க்கெட் கட்டப்பட்டது.

இதற்கான பணிகள் முடிவடைந்த நிலையில் கோவையில் தயாரான லூலு ஹைபர் மார்க்கெட்டை தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா தொடங்கி வைத்தார். மேலும் தஞ்சாவூரிலும் இந்த லூலு நிறுவனம் கால்பதிக்க உள்ளதாக நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார். ஏனெனில் தஞ்சாவூர் மாவட்டம் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் நிலையில் விவசாயிகளுக்கு பயனளிக்கும் விதமாக மாடர்ன் ரைஸ் மில் அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறு தஞ்சாவூரிலும் லூலு நிறுவனம் மாடர்ன் ரைஸ் மில் அமைத்தால் விவசாயிகள் பெரிதும் பயனடைவார்கள். தஞ்சாவூர் மட்டுமில்லாமல் சென்னையிலும் மால் கட்டப்பட உள்ளது. மேலும் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் l, திண்டுக்கல் மாவட்ட ஒட்டன்சத்திரம் ஆகிய இரண்டு இடங்களில் உணவு பதப்படுத்தும் மையம் அமைப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.