
கன்னடா திரையுலகம் மூலம் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா, தற்போது கனடா, தெலுங்கு, தமிழ் போன்ற திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரை நேஷனல் கிரஷ் என்று ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.
இவரும், நடிகர் விஜய் தேவர்கொண்டாவை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன, இந்நிலையில் விஜய் தேவர்கொண்டா உடன் பாக்யஸ்ரீ போர்ஸ் நடிப்பதால் இருவரையும் ராஷ்மிகா கண்காணிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதாவது “கிங்டம்” என்ற படத்தில் நடிகை பாக்கியஸ்ரீ போர்ஸ் உடன் விஜய் தேவர்கொண்டா நடிக்கிறார். இந்த படத்தில் இவர்கள் இருவருக்கும் இடையே நெருக்கமான காட்சிகள் இருக்கிறதாம். இதனால் படக்குழுவில் உள்ள சிலரிடம் இவர்கள் இருவரையும் கண்காணிக்கும்படி நடிகை ராஷ்மிகா தரப்பில் கூறியிருப்பதாக தகவல்கள் பரவியுள்ளது.
தனது காதலர் அழகான பெண்ணுடன் நடிக்கும் போது இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுவது சகஜம் தான் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். நடிகை ராஷ்மிகா தற்போது இந்தி படத்தில் நடித்து வருகிறார். நடிகை பாக்கியஸ்ரீ துல்கர் சல்மான் உடன் “காந்தா” என்ற படத்தில் நடித்திருக்கிறார்.