
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றியவர் அஜித் குமார். இவர் அக்கோவிலில் நடந்த திருட்டுத் தொடர்பாக விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு காவல்துறையினரால் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்த வழக்கை மதுரை மாவட்ட நீதிமன்றம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் உயிரிழந்த அஜித்குமாரின் தாயார் மற்றும் குடும்பத்தினரை அமைச்சர் பெரிய கருப்பன், மாவட்ட ஆட்சியர் பொற்கொடி நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளனர்.
அப்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அஜித்குமாரின் தாயாரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களிடம் பேசிய முதல்வர், அரசின் அனைத்து நிபாரணங்களையும் உடனடியாக கிடைக்க ஏற்பாடு செய்வதாகவும், அஜித்குமாரின் சகோதரருக்கு நிரந்தர அரசு வேலை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார்.
இதுகுறித்து அஜித்குமாரின் தாயார் கூறியதாவது, முதலமைச்சர் எங்களிடம் வருத்தம் தெரிவித்தார். மேலும் எங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக செய்து தருவதாகவும் வாக்களித்தார் என கூறியுள்ளார்.