நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில், பெண்களின் பாதுகாப்பு குறித்த கவலையும் விவாதங்களும் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
இத்தகைய சூழலில், நள்ளிரவு நேரத்தில் தனியாகப் பயணித்த இளம் பெண் ஒருவர், மும்பை நகரத்தில் பெண்களுக்கு இருக்கும் பாதுகாப்பு குறித்துப் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவி, நெட்டிசன்களிடையே பெரும் விவாதத்தையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
நள்ளிரவு சுமார் 2:30 மணி அளவில், எவ்வித அச்சமும் இன்றி தனியாகச் சாலை வழியே வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த அந்தப் பெண், மும்பையின் பாதுகாப்பை உணர்ந்து நெகிழ்ச்சியுடன் பேசிய காட்சிகள் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளன.
அந்த வீடியோவில் பேசியுள்ள அந்த இளம் பெண், “கடவுளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும், நான் இப்போது மும்பை நகரில் இருக்கிறேன். நள்ளிரவு 2:30 மணியாகிறது, ஆனால் இந்த நேரத்தில் கூட நான் எவ்வித பயமும் இன்றி தனியாக எனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருக்கிறேன்” என்று மிகவும் நிம்மதியோடும் பெருமையோடும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மற்ற பல பெரிய நகரங்களில் நள்ளிரவு நேரத்தில் பெண்கள் தனியாக வெளியே செல்வதற்கே அச்சப்படும் சூழலில், மும்பை நகரில் இரவு நேரத்திலும் தடையற்ற பாதுகாப்பும் சுதந்திரமும் கிடைப்பதாக அவர் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
இந்தப் பதிவு சமூக வலைத்தளங்களில் வெளியான சில மணி நேரங்களிலேயே பல்லாயிரக்கணக்கானோரால் பார்க்கப்பட்டு, இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் மும்பை காவல் துறைக்கும், அங்குள்ள சமூகச் சூழலுக்கும் நெட்டிசன்கள் தங்களது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அதே வேளையில், நாட்டின் அனைத்து நகரங்களிலும் இரவு பகல் பாராது பெண்கள் அச்சமின்றி நடமாடும் அளவிற்குப் பாதுகாப்பான சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் இந்த வைரல் வீடியோ மீண்டும் ஒருமுறை உரக்க உணர்த்தியுள்ளது.
See this Instagram video by @swathi.prabhakar.shetty https://t.co/yXgcfIRefS
“>
