கிரிக்கெட் மைதானத்தில் சில தருணங்கள் ரசிகர்களின் இதயங்களைச் சுண்டி இழுக்கும். அப்படிப்பட்ட ஒரு அற்புதம் தான் நேற்று காலே மைதானத்தில் அரங்கேறியது. இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் பரபரப்புக்கு பஞ்சமின்றி நகர்ந்து கொண்டிருக்கிறது. பேட்டிங்கில் சற்று சோதித்தாலும், இந்திய அணியின் கேப்டன் கில் தனது அபாரமான ஃபீல்டிங் மூலம் ஒட்டுமொத்த மைதானத்தின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார்.

இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் வீசிய பந்தை எதிர்கொண்டார் இன்-பார்ம் பேட்ஸ்மேன் கமிந்து மெண்டிஸ். பந்தின் வீச்சைக் கணிக்கி முன்கூட்டியே இறங்கி வந்து டிரைவ் ஆட முயன்றார் மெண்டிஸ். ஆனால், பந்து சற்று மேலே எழும்பியதே தவிர, பேட்டில் பட்டு லேசாகத் தாழ்வாகவே பறந்தது. எக்ஸ்ட்ரா கவர் திசையில் நின்றுகொண்டிருந்த இந்திய கேப்டன்  கில்லின் பார்வை அந்தப் பந்தின் மீது மட்டுமே இருந்தது.

தரையில் படுவேகமாக இறங்கி வந்துகொண்டிருந்த அந்தப் பந்தைக் கண்ட கில், எந்த ஒரு விநாடியும் யோசிக்கவில்லை. மின்னல் வேகத்தில் தனது இடது பக்கமாக முழு நீளத்திற்குப் பாய்ந்தார். தரைக்குச் சில அங்குல தூரத்தில், பந்து கீழே விழுவதற்குள் தனது இடது கையால் ஒரு அதிசயமான கேட்சைப் பிடித்து அசத்தினார் கில். தரையில் பலத்த மோதலுடன் விழுந்தாலும், பந்து அவர் கையிலிருந்து நழுவவே இல்லை.

 

இந்த அட்டகாசமான விக்கெட்டை வீழ்த்திய உற்சாகத்தில், கில் பந்தைக் காற்றில் வீசி எறிந்துவிட்டு, கைகளை உயர்த்தித் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மறுபுறம், இந்த விக்கெட்டைக் கண்ட இலங்கை ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். தற்போது இந்த அற்புத காணொளி சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.