கால்பந்து உலகின் ஜாம்பவான் நெய்மருக்கும், மிட்ஃபீல்டர் தியாகோ மெண்டுக்கும் இடையே நீண்ட காலமாக நிலவிவரும் மோதல் போக்கு, கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியின்போது மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சாவ் ஜனூரியோ மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்திற்கு முன்னதாக, பாரம்பரியமான கைகுலுக்கும் நிகழ்வின்போது தியாகோ மெண்டஸ் நெய்மரை புறக்கணித்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கம்போல ஆட்டத்திற்கு முந்தைய வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்ள வீரர்கள் வரிசையாக நின்றபோது, வாஸ்கோ டா காமா அணியின் மிட்ஃபீல்டரான தியாகோ மெண்டஸ், நட்சத்திர வீரர் நெய்மரை கண்டுகொள்ளாமல் கடந்து சென்றார். அங்கே எந்தவிதமான வெளிப்படையான சச்சரவுகளும் ஏற்படவில்லை என்றாலும், அந்த சங்கடமான தருணம் உடனடியாகப் பலரின் கவனத்தை ஈர்த்தது. மெண்டசின் இந்தச் செயலால் ஆச்சரியமடைந்த நெய்மரின் எதிர்வினையும் சமூக வலைதளங்களில் பெரிதும் பேசப்பட்டது.
இந்த இரு வீரர்களுக்கு இடையேயான மோதல் என்பது புதியதல்ல; பிரான்சின் லிகு 1 லீக் போட்டிகளில் விளையாடிய காலத்திலிருந்தே இவர்களுக்கிடையே பகை தொடர்கிறது. கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற ஒரு போட்டியில், மெண்டஸ் செய்த ஆபத்தான மற்றும் தீவிரமான டேக்கிங் காரணமாக நெய்மருக்கு கணுக்காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்தச் சம்பவத்திற்காக மெண்டஸ் பின்னர் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டிருந்தாலும், அந்தச் சம்பவம் நெய்மர் கேரியரில் ஒரு கறுப்புப் புள்ளியாகவும் இருவருக்குமான உறவில் விரிசலாகவும் நீடித்து வருகிறது.
الاسطورة نيمار يمد يده ليصافح تياغو مينديز ولكنه يتجاهل نيمار 😨😨😨😨😨😨😨😨 pic.twitter.com/rYOAdTpbgR
— Team Neymar (@TeamNey10) August 16, 2026
ஆட்டத்திற்கு முந்தைய இந்தச் சர்ச்சைகள் மற்றும் பரபரப்புகளுக்கு மத்தியில், களத்தில் சாந்தோம் அணி தனது ஆதிக்கத்தை முழுமையாக நிலைநாட்டியது. இறுதியில் 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியைப் பதிவு செய்து சாந்தோம் அணி உற்சாகமாக மைதானத்தை விட்டு வெளியேறியது. வெளியகச் சர்ச்சைகளும் மோதல்களும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தாலும், இறுதியில் கால்பந்து மைதானத்தில் சாந்தோம் அணி தனது அசாத்திய வெற்றியின் மூலம் தகுந்த பதிலடியைக் கொடுத்துள்ளது.
