பிரபல நடிகை ஷெஹ்னாஸ் கில் தனது புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பில் மும்முரமாக ஈடுப்பட்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஒரு விபத்து நிகழ்ந்துள்ளது. அவர் அணிந்திருந்த மூக்குத்தி திடீரெனக் கழன்று அவரது வாய்க்குள்ளே சென்றுள்ளதுடன், நேராகத் தொண்டைப் பகுதியில் சென்று சிக்கிக்கொண்டது. இந்த அதிர்ச்சிகரமான திடீர் சம்பவத்தால் மூச்சுவிடத் திணறிய அவரைப் பார்த்துக் படக்குழுவினர் உடனடியாக என்ன செய்வதென்று தெரியாமல் பதறிப்போயுள்ளனர்.

இதைக் கவனித்த சக நடிகர் செளரப் சச்தேவா எந்தவொரு தாமதமும் செய்யாமல் உடனடியாக ஓடிவந்து ஷெஹ்னாஸ் கில்லின் முதுகில் தட்டிக் கொடுத்து உதவினார். இதனால் தொண்டையில் சிக்கியிருந்த மூக்குத்தி வெளியேறி, அவர் ஒரு பெரிய ஆபத்திலிருந்து அதிர்ஷ்டவசமாகத் தப்பினார். இந்த எதிர்பாராத விபத்து அனைவரையும் சில நிமிடங்கள் கலங்க வைத்ததுடன், படப்பிடிப்பு தளத்தில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இருப்பினும், அந்த பயங்கரமான சூழ்நிலையிலிருந்து மீண்ட சிறிது நேரத்திலேயே ஷெஹ்னாஸ் கில் சற்றும் தயங்காமல் மீண்டும் உற்சாகமாகத் தனது படப்பிடிப்பில் கலந்துகொண்டு வழக்கம்போல் நடிக்கத் தொடங்கினார். அவரின் இந்த அர்ப்பணிப்பு மற்றும் தைரியத்தைப் படக்குழுவினரும் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் பெரிதும் பாராட்டி வைரலாக்கி வருகின்றனர்.