தாய்லாந்தில் நியல் ஹார்பிசன் என்பவரால் நடத்தப்படும் ‘அதிகாரப்பூர்வ தளம்’ என்ற விலங்குகள் மீட்பு அமைப்பின் மூலம், மோசமாகப் பாதிக்கப்பட்ட தெரு நாய் ஒன்றுக்குக் கிடைத்த புதிய வாழ்க்கையைப் பற்றிய நெகிழ்ச்சியான செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் அன்பும், வாழ்வதற்கான இரண்டாவது வாய்ப்பும் ஒரு உயிரின் வாழ்க்கையை எவ்வாறு முற்றிலும் மாற்றியமைக்கும் என்பதற்கு உதாரணமாக அந்தப் பெண் நாயின் வியக்கத்தக்க மாற்றம் அமைந்துள்ளது. கொடுமைப்படுத்தப்பட்டு மிக மோசமான நிலையில் மீட்கப்பட்ட அந்த நாய், தற்போது முறையான கவனிப்பு மற்றும் தகுந்த சிகிச்சைக்குப் பின், அடையாளம் காண முடியாத அளவிற்கு ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் மாறியுள்ள வீடியோ நெட்டிசன்களை நெகிழ வைத்துள்ளது.
‘Love and a second chance’: This abused pooch’s stunning transformation will make your day | Watch https://t.co/Iqk8jLbGO5
“>
இந்நிலையில் ‘அதிகாரப்பூர்வ தளம்’ அமைப்பை கடந்த 2021-ஆம் ஆண்டு தொடங்கிய நியல் ஹார்பிசன் மற்றும் அவரது குழுவினர், ஆயிரக்கணக்கான தெரு நாய்களுக்கு உணவளிப்பதோடு அவற்றுக்குக் கருத்தடை சிகிச்சைகளையும் செய்து வருகின்றனர்.
மேலும், சமீபத்தில் அவர் தனது செல்லப் பிராணியான ‘டினா’ என்ற கோல்டன் நாயின் நினைவாக ஒரு முழு அளவிலான மருத்துவ மனையையும் மற்றும் வயதான நாய்களுக்கான ஓய்வுக் இல்லத்தையும் தொடங்கி, ஆதரவற்ற விலங்குகளுக்குத் தொடர்ந்து மறுவாழ்வு அளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
