சமூக வலைதளங்களில் வைரலாவதற்காவே விசித்திரமான உணவு பரிசோதனைகள் செய்வது தற்போதைய ட்ரெண்டாக மாறியுள்ளது. அந்த வகையில், தற்போது தெருவோர உணவு வியாபாரி ஒருவர் வெங்காயம் மற்றும் மசாலாப் பொருட்களைச் சேர்த்து ‘வேப்பம்பூ அல்லது வேப்ப இலை பராட்டா’ தயாரிக்கும் புதிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவை இதுவரை 21 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். இந்த விசித்திரமான வேப்பம்பூ பராட்டா உணவைக் கண்டு நெட்டிசன்கள் தங்களது கலவையான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
स्ट्रीट फूड वाले ने बनाया नीम का पराठा, मसाले और प्याज डालकर तैयार की अनोखी डिश, लोग बोले- ‘ये क्या बना दिया!’ https://t.co/E3yLE2xSmg
“>
இதனால் வேப்பிலை ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதால் சிலர் இது ஒரு சத்தான உணவு என்று ஆதரவு தெரிவித்தாலும், பெரும்பாலோர் “என்னங்க இதெல்லாம், சாப்பாட்டை வச்சு இப்படியா விளையாடுறது?” என்று கோபத்துடனும் கிண்டலாகவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
அதேபோல் முன்னதாக ஓரியோ பக்கோடா, சாக்லேட் பிரியாணி மற்றும் குலாப் ஜாமுன் பர்கர் போன்ற வித்தியாசமான உணவுகள் வைரலானதை போல, தற்போது இந்த வேப்பம்பூ பராட்டாவும் இணையவாசிகள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
