நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ மற்றும் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘ஓம்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் அக்டோபர் மாதத்தில் அடுத்தடுத்த நாட்களில் ரிலீசாக உள்ளதால், கோலிவுட்டில் ரஜினி Vs தனுஷ் என்ற மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் போட்டி உருவாகியுள்ளது.

தனுஷ், ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்த பிறகு, இருவரின் திரைப்படங்களும் தியேட்டரில் நேருக்கு நேர் மோதுவது இதுவே முதன்முறை என்பதால் திரைத்துறையினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் வெளியான ரஜினியின் ‘கூலி’ மற்றும் தனுஷின் ‘கர’ ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபீஸில் தோல்வியையும் விமர்சனங்களையும் சந்தித்ததால், இந்த இரண்டு படங்களின் வெற்றியும் இருவருக்குமே மிக முக்கியமானதாக மாறியுள்ளது.

மம்மூட்டி, சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ள தனுஷின் ‘ஓம்’ திரைப்படம் அக்டோபர் 16ஆம் தேதி, அதற்கு முன்னதாக ஒரு நாள் ரஜினியின் ‘ஜெயிலர் 2’ அக்டோபர் 15ஆம் தேதியும் உலகமெங்கும் ரிலீசாக உள்ளது. குடும்பப் பிரிவுக்குப் பின் முதன்முறையாக கரியரில் நேருக்கு நேர் மோதும் இந்த பாக்ஸ் ஆபீஸ் போரில் ஜெயிக்கப் போவது யார் என்பதைப் பார்க்க ஒட்டுமொத்த கோலிவுட்டும் ஆர்வமாக உள்ளது.