இந்தியாவில் வசித்து வரும் போலந்து நாட்டைச் சேர்ந்த அக்னிஸ்கா ஹடலா  என்ற பெண்மணி, உலக நாடுகள் இயற்கைச் சீற்றங்களையும் பருவநிலை மாற்றங்களையும் எதிர்கொள்ளும் போது மேற்கத்திய நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையே சர்வதேச ஊடகங்கள் காட்டும்  இரட்டை நிலையை  தோலுரித்துக் காட்டி வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் வீடியோ சோசியல் மீடியா ஏரியாவிலும் மத்தியிலும் மிகப்பெரிய புயலையும் மெகா விவாதத்தையுமே கிளப்பியுள்ளது.

தற்பொழுது போலந்தில் இருக்கும் அக்னிஸ்கா ஹடலா, நெற்றியில் பொட்டு வைத்து புடவை அணிந்து இந்தியப் பாரம்பரிய உடையில் தோன்றி, தற்பொழுது ஐரோப்பா முழுவதும் வாட்டி வதைத்து வரும் மெகா வெப்ப அலை குறித்து அதிரடியாகப் பேசியுள்ளார்.

“ஐரோப்பா போன்ற மேற்கத்திய நாடுகள் வெப்ப அலையால் கஷ்டப்படும் போது அதை ஒரு சோகமான பேரிடராகப் பார்க்கும் இந்த உலகம், இந்தியா போன்ற நாடுகள் கஷ்டப்படும் போது மட்டும் அதை ஏன் ஒரு தோல்வியாகப் பார்த்து கேலி செய்கிறது?!” என்று அவர் ஓப்பனாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்பொழுது போலந்தின் மலைப்பகுதிகளிலேயே வெயில் 35 டிகிரி செல்சியஸைத் தாண்டி கொடூரமாகப் பதிவாகி வருவதாகவும், பிரான்சில் மட்டும் 1,000-க்கும் மேற்பட்டோர் வெப்பத்தால் உயிரிழந்துள்ளதாகவும், போலந்தில் கடந்த ஞாயிறன்று எக்கச்சக்கமாக 40.5 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகி புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே இந்தியாவில் 35 டிகிரி என்பது  இதமான கிளைமேட் என்றும், இந்தியக் கோடைகாலம் சாதாரணமாக 40 முதல் 50 டிகிரி வரை எகிறும் என்றும் அவர் ஒப்பிட்டுக் காட்டியுள்ளார்.

ஐரோப்பாவில் உள்ள பல வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இந்தியாவைப் போல ஏசி (AC) அல்லது சாதாரண மின்விசிறி (Fan) கூட இல்லாததால், வெயிலைத் தாங்க முடியாமல் பள்ளிகள் மூடப்பட்டு, மின்சாரக் கட்டமைப்பு பாதிக்கப்பட்டு, மக்கள் மலிவான ஏசியாக நினைத்துப் பூங்காக்களிலும் கடற்கரைகளிலும் இரவைக் கழித்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

முன்பு மும்பையின் வெர்சோவா கடற்கரையிலோ (Versova Beach) அல்லது பூங்காக்களிலோ கரண்ட் கட் ஆகும் போது இந்தியர்கள் இப்படிப் படுத்துத் தூங்கிய புகைப்படங்களை உலகமே மீம்ஸ் போட்டு அசிங்கமாகக் கேலி செய்ததை நினைவூட்டிய அவர், இன்று அதே நிலையை ஐரோப்பியர்கள் எதிர்கொள்ளும் போது மட்டும் உலகம்  பரிதாபப்பட்டு அனுதாபம் காட்டுவது ஏன் என்று சாடியுள்ளார்.

இந்தியாவின் வறுமை, உள்கட்டமைப்பு சவால்கள் போன்ற பிரச்சனைகளைத் தான் மறுக்கவில்லை என்று கூறிய அவர், 1.4 பில்லியன் மக்கள் தொகை கொண்ட ஒரு மெகா நாட்டை நிர்வகிப்பதையும், வெறும் இரண்டு பேர் இருக்கும் மேற்கத்தியக் குடும்பங்களை நிர்வகிப்பதையும் ஒரே தராசில் வைத்து ஒப்பிடக் கூடாது என்றும், பருவநிலை மாற்றம் என்பது உலகளாவிய உண்மை என்பதால் இந்தியாவை மட்டும் எப்போதும்  இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது அநியாயம் என்றும் விளக்கியுள்ளார்.