பொதுவாக மக்கள் நாய், பூனை அல்லது கிளிகளைத் தான் வீட்டில் செல்லப் பிராணியாக வளர்ப்பார்கள்; ஆனால் அதற்கு முற்றிலும் மாறாக ஒரு ஆச்சரியமான செயல் நடந்துள்ளது.
பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த குட்டிச் சிறுமி யாரும் யோசிக்கக் கூட முடியாத வகையில் ஒரு விசித்திரமான முள்ளம்பன்றியைச் செல்லப் பிராணியாக வளர்த்து வருவதுடன், அதை மிகச் சாதாரணமாக வயல்வெளியில் நடைப்பயிற்சிக்கு அழைத்துச் சென்று சிறுமிக்கு பின்னாலே அந்த முள்ளம்பன்றி ஓடி வருவதும் நடந்த வருவதுமான அரிய பாசக் காட்சி நெட்டிசன்களிடையே பயங்கர ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தன் உடம்பில் இருக்கும் கூர்மையான முட்களால் யாருக்கும் எந்த ஆபத்தும் வந்துவிடக் கூடாது என்பதில் அந்த முள்ளம்பன்றியும், அதைத் தொடுவதற்குச் சிறிதும் பயமே இல்லாமல் அலாதி பாசம் காட்டும் அந்தச் சிறுமியும் ஒன்றாக வலம் வரும் இந்தக் காட்சி பதிவாகியுள்ளது.
பங்களாதேஷில் ஒரு சிறுமி செல்லப் பிராணியாக வளர்க்கும் முள்ளம்பன்றியை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லும் காட்சி காணப்பட்டது. இந்த அரிய நட்பு சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளதுpic.twitter.com/uuvxeaRGW1
— Rajini (@rajini198080) June 29, 2026
“>
எங்குமே பார்க்கக் கிடைக்காத இந்த கியூட்டான அரிய நட்பு தற்போது எக்ஸ் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் நெட்டிசன்களைக் கவர்ந்து, பார்ப்பவர் அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.
