உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் பார்வைகள் அனைத்தும் தற்போது இந்திய கிரிக்கெட்டின் புதிய நட்சத்திரமான இளம் வீரர் வைபவ் சூர்யவன்சி மீதுதான் குவிந்துள்ளன. இந்திய சீனியர் அணியில் தேர்வு செய்யப்பட்ட மிக இள வயது வீரர் என்ற பெருமையைப் பெற்ற இவர், அயர்லாந்து சுற்றுப்பயணத்தில் தனது சர்வதேச அறிமுகத்தை  எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்.

முதலாவது டி20 போட்டியில் பிளெயிங் 11-ல்  இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், இரண்டாவது போட்டியில் களமிறக்கப்படுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், மைதானத்திற்கு வெளியே வைபவ் சூர்யவன்சி செய்த குறும்புத்தனம் அடங்கிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி, ரசிகர்களைப் பெருமளவில் கவர்ந்து வைரலாகி வருகிறது.

அயர்லாந்துக்கு எதிரான போட்டியின் போது, வைபவ் சூர்யவன்சி எலக்ட்ரோலைட் எனர்ஜி டிரிங்க் (Electrolyte Drink) ஒன்றை ஒரு மடக்கு குடிக்கிறார். ஆனால், அதன் சுவை அவருக்குப் பிடிக்காததால், அவர் உடனடியாக முகத்தை மிகவும் வித்தியாசமாகவும் வேடிக்கையாகவும் சுளிக்கிறார். இந்த எதார்த்தமான ரியாக்‌ஷன் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளதுடன், இணையத்தில் மீம்ஸ்களாகவும், சுவாரசியமான கமெண்டுகளாகவும் குவிந்து வருகின்றன.

அனுபவம் வாய்ந்த சீனியர் வீரர்களுடன் விளையாடினாலும், வைபவ்வுக்கு இன்னும் வெறும் 15 வயதுதான் ஆகிறது என்பதை இந்தத் தருணம் நினைவூட்டுவதாகவும், உண்மையான ‘பிக் பாய் லீக்’ என்றழைக்கப்படும் தொழில்முறை கிரிக்கெட்டுக்குள் அவர் நுழைந்துவிட்டதற்கான ‘ரியாலிட்டி செக்’ இது என்றும் ரசிகர்கள் கலகலப்பாகக் குறிப்பிட்டு வருகின்றனர். இந்த கியூட்டான வீடியோ, இந்த இளம் கிரிக்கெட் வீரரின் பிரபலத்தை மேலும் பல மடங்கு உயர்த்தியுள்ளது.