“அவங்க கூட்டணியை விட்டுப் போனது நாங்க ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்றுதான், அவங்களோட நடவடிக்கைகள் எல்லாமே அப்படித்தான் இருந்தது; எங்க தலைவர் சொன்னது மாதிரி நாங்களா யாரையும் போன்னு சொல்லல, அவங்களா விருப்பப்பட்டு போகும்போது நாங்க ஏன் தடுக்கணும்!”
– என்று திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் மதிமுகவின் விலகல் குறித்து தூத்துக்குடியில் காரசாரமாகப் பேசியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மதிமுக கூட்டணியில் இருந்து விலகியதால் நிச்சயமாக திமுக இன்னும் பலப்படும் என்று திட்டவட்டமாகக் கூறினார்.
இதனிடையே, பாஜக நிர்வாகி வினோத் பி செல்வம் தனது வலைத்தளப் பதிவில், எப்படியாவது தனிப்பெரும்பான்மை பெற்றுவிட முதலமைச்சர் விஜய் முயற்சிப்பதாகவும், இப்போது வெறுங்கையை வீசிக்கொண்டு வந்துள்ள வைகோவை தவெக கூட்டணியில் இணைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ள விவகாரம் இணையத்தில் புதிய விவாதப் புயலைக் கிளப்பியுள்ளது.
