தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நோயாளிகளுக்கான சேவைகள் மற்றும் தூய்மையைப் பாரபட்சமின்றி உறுதி செய்யும் வகையில், பொது சுகாதாரத்துறை இயக்குநர்களுக்குத் தமிழக அரசு அதிரடியான மற்றும் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

அதன்படி, மருத்துவமனைகளில் உள்ள சிகிச்சை வார்டுகள் (Wards) மற்றும் கழிவறைகளை எந்நேரமும் மிகத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் என்றும், ஏழை எளிய நோயாளிகளை அங்குள்ள மருத்துவப் பணியாளர்கள் மிகவும் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, “அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக வரும் பொதுமக்களிடம் எந்தவொரு காரணத்திற்காகவும் மருத்துவப் பணியாளர்கள் லஞ்சம் வாங்கக் கூடாது; மீறி லஞ்சம் வாங்கும் புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது எவ்வித சமரசமும் இன்றி லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழ் உரியக் கடுமையான நடவடிக்கை பாயும்” என்று கோட்டை வட்டாரத்திலிருந்து மிகத் தெளிவான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தவெக அரசு சட்டம் ஒழுங்கு மற்றும் மக்கள் நலனில் காட்டி வரும் தீவிர ஆக்ஷனின் (Action) தொடர்ச்சியாகப் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த  உத்தரவு,  சாமானிய மக்கள் மத்தியில் பெரும்  வரவேற்பைப் பெற்றுள்ளது.