பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் நேரடி ஒளிபரப்பின் போது, தொழில்நுட்ப ரீதியாக ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய தவறு சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. இந்தப் போட்டியின் போது மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச வீரர்கள் விளையாடிக் கொண்டிருந்த வேளையில், திரையில் திடீரென இந்திய கிரிக்கெட் அணி தொடர்பான கிராபிக்ஸ் மற்றும் பிராண்டிங் காட்சிகள் தோன்றின. சம்பந்தமே இல்லாத ஒரு போட்டியில் இந்திய அணியின் விவரங்கள் ஒளிபரப்பப்பட்டது ரசிகர்களிடையே பெரும் குழப்பத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.
An error by the production team. 😂 pic.twitter.com/xAhJPzGW3T
— Sheri. (@CallMeSheri1_) May 9, 2026
இந்த ஒளிபரப்பு சொதப்பலை உடனே ஸ்க்ரீன்ஷாட் எடுத்த கிரிக்கெட் ரசிகர்கள், அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கிண்டல் செய்து வருகின்றனர். பலரும் இதனை “தயாரிப்பு குழுவின் தோல்வி” என்று விமர்சித்து வரும் நிலையில், சில ரசிகர்கள் இது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு ஏற்பட்ட அவமானம் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சர்வதேச போட்டிகளின் போது இதுபோன்ற தவறுகள் நடப்பது மிகவும் அரிதான ஒன்று என்பதால், ஒளிபரப்புக் குழுவினர் கவனக்குறைவாகச் செயல்பட்டதே இதற்குக் காரணம் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
