ஐபிஎல் பயிற்சிக் களத்தில் ஜாம்பவான் லசித் மலிங்கா மற்றும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் ஆகியோருக்கு இடையே நடந்த ஒரு சுவாரசியமான மோதல் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
பந்துவீச்சாளர்கள் துல்லியமாக ‘யோர்க்கர்’ வீசப் பயிற்சி பெறுவதற்காக, லசித் மலிங்கா மைதானத்தில் இரண்டு ‘டமி’ ஸ்டம்புகளை நட்டு வைத்து, அவற்றுக்கு இடையே பந்து செல்ல வேண்டும் என ஒரு இலக்கை அமைத்தார். சுமார் 5 நிமிடங்கள் மிகத் துல்லியமாக அளவெடுத்து அந்த ஸ்டம்புகளை மலிங்கா தயார் செய்தார். பந்துவீச்சாளர்கள் ஸ்டம்புகளைத் தாக்காமல், அதற்கு இடைப்பட்ட இடைவெளியில் பந்து வீச வேண்டும் என்பதே மலிங்காவின் திட்டமாக இருந்தது.
Malinga took 5 mins to setup those dummy stumps just so the bowlers could bowl between them, but Deepak Chahar hit the dummy stump on his very first attempt! 😂
The reaction from both of them was absolutely priceless😭😭 pic.twitter.com/4pNN3AcQx1
— OldMonkOfCricket (@OldMonkOfCric) May 7, 2026
ஆனால், பயிற்சி தொடங்கப்பட்ட முதல் பந்திலேயே தீபக் சாஹர் அந்த இலக்கைச் சிதறடித்தார். அவர் வீசிய முதல் பந்தே மலிங்கா கஷ்டப்பட்டு நட்டு வைத்த அந்த ‘டமி’ ஸ்டம்பைத் தவிடுபொடியாக்கியது. தன்னுடைய 5 நிமிட உழைப்பு ஒரே வினாடியில் வீணானதைப் பார்த்து மலிங்கா கொடுத்த ‘ரியாக்ஷன்’ மற்றும் எதேச்சையாகச் செய்துவிட்டுச் சிரித்த தீபக் சாஹரின் முகம் தற்போது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. “குருவுக்கே மிஞ்சிய சீடன்” என ரசிகர்கள் இந்த வீடியோவைப் பகிர்ந்து தீபக் சாஹரைப் பாராட்டி வருகின்றனர்.
பயிற்சிக் களத்தில் நிலவும் இத்தகைய கலகலப்பான சூழல், வீரர்களுக்கு இடையேயான நட்புறவை வெளிப்படுத்துவதாக அரசியல் மற்றும் விளையாட்டு விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
