தமிழக அரசியல் களம் 108 இடங்களை வென்ற தவெக-வின் பதவியேற்பு இழுபறியால் தகித்துக் கொண்டிருக்கும் நிலையில், பிரபல நடிகர் தம்பி ராமையா வெளியிட்டுள்ள உருக்கமான வீடியோ அறிக்கை காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
“ஆளுநர் ஐயா… உங்களை பாதம் தொட்டு வணங்குகிறேன்” எனத் தொடங்கி, “விஜய் இப்போது அடுத்த எம்.ஜி.ஆராகி விட்டார்; 2 கோடி மக்கள் அவருக்கு வாக்களித்துள்ளனர். ஓட்டுரிமை இல்லாத குழந்தைகள் கூட அவர் சிஎம் ஆக வேண்டும் என ஏங்குகிறார்கள். அந்தச் சின்னஞ்சிறு இதயங்களின் ஆசையைக் காப்பாற்றுங்கள். அவருக்கு 2 வாரம் டைம் கொடுங்கள், பெரும்பான்மையை நிரூபித்தால் ஆட்சி தொடரட்டும், இல்லையென்றால் கலைத்துவிடுங்கள். தயவுசெய்து அவரை அழைத்து வாய்ப்பு கொடுங்கள்” எனப் பொதுமக்களில் ஒருவனாக அவர் கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.
அடுத்த எம் ஜி ஆர் விஜயை ஆளுநர் உடனடியாக அழைத்து பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும்..நடிகர் தம்பிராமையா வீடியோ வெளியிட்டு வேண்டுகோள்..#TVK | #TVKVijay | #ThambiRamaiah | #PolimerNews | #Governor pic.twitter.com/8TGTVn8ZxH
— Polimer News (@polimernews) May 7, 2026
“>
ஒரு பக்கம் திமுக-அதிமுக கூட்டணி வதந்திகள் பரவ, மறுபக்கம் தம்பி ராமையாவின் இந்த உணர்ச்சிகரமான “எம்.ஜி.ஆர்” ஒப்பீடு தவெக தொண்டர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
