‘தி டார்க் நைட்’ புகழ் ஹாலிவுட் நடிகர் ஹீத் லெட்ஜர், தனது 28-வது வயதில் 2008-ல் காலமானார். அவர் மறைந்தபோது சுமார் 1,54,57,00,000 ரூபாய் 16.3 மில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்களை விட்டுச் சென்றார். இருப்பினும், அவர் 2003-ல் எழுதிய உயிலில் தனது ஒரே மகள் மட்டில்டாவின் பெயர் இடம்பெறவில்லை.

மேலும் மட்டில்டா பிறப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்த உயில் எழுதப்பட்டதால், அதில் சொத்துக்கள் அனைத்தும் அவரது பெற்றோர் மற்றும் சகோதரிகளுக்கே சேரும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது அப்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

இருப்பினும், ஹீத் லெட்ஜரின் குடும்பத்தினர் மனிதாபிமானத்துடன் ஒரு பெரிய முடிவை எடுத்தனர். உயிலில் பெயர் இல்லாவிட்டாலும், ஹீத்தின் முழு சொத்துக்களையும் அவரது மகள் மட்டில்டாவுக்கே வழங்க அவர்கள் முன்வந்தனர். “ஹீத் உயிருடன் இருந்திருந்தால் இதையேதான் விரும்பியிருப்பார்” என்று அவரது தந்தை கிம் லெட்ஜர் தெரிவித்தார்.

மேலும், ஜானி டெப் மற்றும் ஜூட் லா போன்ற சக நடிகர்களும் ஹீத்தின் கடைசி படத்தின் வருமானத்தை மட்டில்டாவுக்கே வழங்கினர். தற்போது 20 வயதாகும் மட்டில்டா, தனது தாய் மிச்செல் வில்லியம்ஸுடன் நியூயார்க்கில் வசித்து வருகிறார்.