ஐபிஎல் 2026 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில், பஞ்சாப் வீரர் ஷஷாங்க் சிங் செய்த ஃபீல்டிங் தவறு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

யுஸ்வேந்திர சாஹல் வீசிய பந்தை ஹென்ரிச் கிளாசன் அடிக்க, அது நேராக டீப் பேக்வார்டு ஸ்கொயர் லெக் திசையில் இருந்த ஷஷாங்க் சிங்கிடம் சென்றது. மிகவும் எளிதான கேட்ச் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், பந்து அவர் கையில் பட்டு நழுவி பவுண்டரிக்குச் சென்றது.

இந்த சீசனில் ஷஷாங்க் சிங் கோட்டை விடும் 5-வது கேட்ச் இதுவாகும். இந்தத் தவற்றைக் கண்ட பந்துவீச்சாளர் சாஹல், அதிர்ச்சியில் மைதானத்திலேயே அமர்ந்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

“>

 

ஷஷாங்க் சிங்கும் தான் செய்த தவற்றின் தீவிரத்தை உணர்ந்து மிகுந்த சோகத்துடன் காணப்பட்டார். ஒரு முக்கியமான விக்கெட்டை எடுக்கும் வாய்ப்பு நழுவியதுடன், அது நான்கு ரன்களாக மாறியது பஞ்சாப் அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

பேட்டிங்கில் ஜொலிக்கும் ஷஷாங்க், ஃபீல்டிங்கில் தொடர்ந்து சொதப்புவது பஞ்சாப் ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.