தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில், திமுக கூட்டணிக்குள் மிகப்பெரிய மோதல் வெடித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், திமுக தலைமையின் அணுகுமுறை குறித்துக் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார். “இடதுசாரிகளுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்க திமுக மறுத்துவிட்டது; குறைந்தபட்சம் 6 தொகுதிகள் கேட்டபோது கூட இடம் ஒதுக்காமல் அவமதித்துள்ளது” என அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், திமுக அமைச்சர்கள் தற்போதே வெற்றி பெற்றுவிட்டதாகப் பெருமை பேசிக் கொள்வதைக் கடுமையாகச் சாடியுள்ளார். உழைக்கும் வர்க்கத்திற்காக இந்த அரசு என்ன செய்தது என்ற கேள்வியை எழுப்பியுள்ள அவர், அமையப்போகும் திமுக ஆட்சி எத்தகைய ஆட்சியாக இருக்கும் என்பதே மிகப்பெரிய கேள்விக்குறி என எச்சரித்துள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பே கூட்டணிக் கட்சித் தலைவர்கள் இப்படி பகிரங்கமாக அதிருப்தி தெரிவிப்பது திமுக தலைமைக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
