நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை பெயரில் சில மர்ம நபர்கள் மோசடியில் ஈடுபட்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக அகரம் அறக்கட்டளை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், சென்னை தி.நகரில் உள்ள அலுவலகத்தைத் தவிர, தங்களுக்கு வேறு எங்கும் கிளை அலுவலகங்கள் கிடையாது எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகரம் பெயரில் யாராவது உங்களை அணுகினால், அவர்களின் பின்னணியை உறுதிப்படுத்தாமல் உங்களது கல்விச் சான்றிதழ்கள், பணம் அல்லது தனிப்பட்ட தகவல்களை ஒருபோதும் வழங்க வேண்டாம் எனப் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவும் இந்த அமைப்பின் பெயரைப் பயன்படுத்தி யாராவது மோசடி செய்தால், உடனடியாக அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் உறுதி செய்து கொள்ளுமாறு அந்த அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
