ஐபிஎல் 2026 தொடரின் முக்கியமான ‘எல் கிளாசிகோ’ போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா வெறும் 1 ரன்னில் ஆட்டமிழந்து ரசிகர்களைப் பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளார்.
நேற்று வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், மும்பை அணி 208 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கித் துரத்தியபோது, இக்கட்டான சூழலில் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா எதாவது மேஜிக் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக, அவர் பேட்டிங் செய்ய வருவதற்கு முன்பு டக்-அவுட் அருகே தீவிரமாக வார்ம்-அப் செய்த வீடியோக்களைப் பார்த்த ரசிகர்கள், “இன்று ஹர்திக் சம்பவம் செய்யப்போகிறார்” என நம்பினர். ஆனால், களத்திற்கு வந்த அவர் சந்தித்த 2-வது பந்திலேயே பொறுப்பற்ற முறையில் ஷாட் ஆடி கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
மும்பை இந்தியன்ஸ் அணி 103 ரன்கள் வித்தியாசத்தில் தனது மோசமான தோல்வியைப் பதிவு செய்துள்ள நிலையில், கேப்டன் ஹர்திக்கின் இந்த செயல்பாடு சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. “வார்ம்-அப்பில் காட்டிய வேகம் பேட்டிங்கில் காணவில்லையே?” என நெட்டிசன்கள் அவரது வார்ம்-அப் வீடியோவையும், ஸ்கோர்கார்டையும் வைத்து மீம்ஸ்களைப் பறக்கவிட்டு வருகின்றனர்.
Hardik Pandya doing his warm-up before going out to bat and score just 1 run.🤦♂️ pic.twitter.com/8x9klvG2dl
— 𝐑𝐮𝐬𝐡𝐢𝐢𝐢⁴⁵ (@rushiii_12) April 24, 2026
“>
2026 ஐபிஎல் சீசனில் மும்பை அணி தொடர் தோல்விகளால் தவித்து வரும் நிலையில், ஒரு கேப்டனாக ஹர்திக் பாண்டியா பொறுப்பின்றி ஆட்டமிழந்தது அந்த அணியின் பிளே-ஆஃப் கனவுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
