‘போர் தொழில்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடித்துள்ள ‘கர’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதிரடி திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தில் தனுஷுடன் இணைந்து, மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான மமிதா பைஜு, சுராஜ் வெஞ்சாரமூடு மற்றும் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் கே.எஸ். ரவிக்குமார், கருணாஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். தனுஷ் – ஜி.வி.பிரகாஷ் கூட்டணி ஏற்கனவே பல வெற்றிப் பாடல்களைக் கொடுத்துள்ளதால், இப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ் இப்படத்தைப் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது  இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது, விறுவிறுப்பான காட்சிகளுடனும் மர்மம் நிறைந்த திரில்லர் பின்னணியுடனும் அமைந்து ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. தனுஷின் வித்தியாசமான நடிப்பு மற்றும் விக்னேஷ் ராஜாவின் மேக்கிங் ஆகியவை படத்திற்குப் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படம் வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கோடை விடுமுறை காலத்தில் வெளியாவதால், வசூல் ரீதியாக இப்படம் மிகப்பெரிய சாதனையைப் படைக்கும் எனத் திரையுலக வர்த்தக நிபுணர்கள் கருதுகின்றனர்.