தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தற்போது தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது திருச்சி மாவட்டத்திற்கு அவர் பிரச்சாரத்திற்கு வந்துள்ள நிலையில் மலைக்கோட்டையில் அவரை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்துள்ளனர். இதன் காரணமாக ரோடு ஷோ சென்றபடியே நடிகர் விஜய் உற்சாகமாக சென்றார்.

 

இந்த நிலையில் திருச்சி ஏர்போர்ட் அந்தோணியார் திருக்கோவிலுக்கு நடிகர் விஜய் சென்றார். அங்கு பேராலயத்தில் முழங்காலிட்டு நடந்து பிரார்த்தனை செய்தார். மேலும் நடிகர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடும் நிலையில் அவர் முழங்காலிட்டபடியே மனம் உருகி பிரார்த்தனை செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.