தனது கணவர் சுந்தர் சி-க்கு எப்படி சீட் கிடைத்தது என்று கேள்வி எழுப்பிய நடிகர் பிரகாஷ் ராஜிற்கு, பாஜக பிரமுகர் குஷ்பூ மிகக் காரசாரமான பதிலடியைக் கொடுத்துள்ளார். “தேர்தலில் போட்டியிட்டு டெபாசிட் கூட வாங்க முடியாமல் தோற்றுப்போனவர் பிரகாஷ் ராஜ். அவருக்கும் என் கணவருக்கும் இடையில் இருக்கும் வித்தியாசத்தை அவர் முதலில் உணர வேண்டும்” என்று குஷ்பூ எள்ளலுடன் பேசியுள்ளார்.

​மேலும், “சுந்தர் சி-க்கு எப்படி சீட் கிடைத்தது என்று அவருக்கு அவ்வளவு ஆர்வம் இருந்தால், அவர் ஃப்ரீயாக இருக்கும்போது சுந்தர் சி-யிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளட்டும். பெங்களூரில் நின்றபோது பிரகாஷ் ராஜ் மட்டும் என்ன சாதித்துவிட்டார்? அவரும் ஒன்றும் அரசியல் குடும்பத்திலிருந்து வந்தவர் இல்லையே” என்று பழைய தோல்விகளை நினைவுபடுத்தி பிரகாஷ் ராஜை விளாசித் தள்ளியுள்ளார். குஷ்பூவின் இந்தத் தாக்குதல் தற்போது இணையத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.