தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சக்கட்டப் போரை எட்டியுள்ள நிலையில், சேலத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.

திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்குச் சேகரித்த அவர், “தம்பி விஜய் முதலில் தன்னை அரசியலில் நிரூபித்துக் காட்டட்டும், அதற்குப் பிறகு சினிமா டயலாக்குகளைப் பேசலாம்” என்று சாடினார். மேலும், “திரையில் நீங்கள் ஹீரோவாக இருக்கலாம், ஆனால் அரசியலைப் பொறுத்தவரை நீங்கள் ஹீரோ இல்லை; லாலி பாப் சாப்பிடும் ஒரு லிட்டில் பாய் (Little Boy) தான்” என்று அவர் கிண்டலாகக் குறிப்பிட்டது கூட்டத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

“>

 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கமல்ஹாசன் முன்னிலையில், விஜய்யின் அரசியல் வருகையை ஒரு சிறுபிள்ளைத்தனமான நகர்வாக பிரேமலதா விமர்சித்தது, தற்போது சமூக வலைதளங்களில் தவெக மற்றும் தேமுதிக தொண்டர்களிடையே கடும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.