மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் அருகே ஜலாரியா கிராமத்தில், 60 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் பகீரத்தை மீட்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி பிரவீன் தேவாசியின் மகனான இச்சிறுவன், வயல்வெளியில் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாகத் திறந்திருந்த ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளான். தகவல் அறிந்ததும் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் நேரில் விரைந்து மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

“>

 

மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) மற்றும் போலீசார் இணைந்து, 6 ஜேசிபி இயந்திரங்கள் மற்றும் அகழ்வாராய்ச்சிக் கருவிகள் மூலம் ஆழ்துளைக் கிணற்றிற்கு இணையாகப் பள்ளம் தோண்டி வருகின்றனர்.

தற்போது குழாய் மூலம் குழந்தைக்குத் தொடர்ந்து ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருவதுடன், கேமராக்கள் மூலம் குழந்தையின் அசைவுகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. ஒட்டுமொத்த கிராம மக்களும் சிறுவன் நலமுடன் மீட்கப்பட வேண்டும் எனப் பிரார்த்தனையுடன் காத்திருக்கின்றனர்.