குஜராத் மாநில பாஜக பெண் நிர்வாகியான சேஜல் என்பவர், இன்று ஒரே நாளில் செய்த அரசியல் அந்தர் பல்டி ஒட்டுமொத்த இந்திய அரசியலையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக, பாஜக-வில் தனக்குப் பாதுகாப்பு இல்லை என்றும், நகருக்குள் கள்ளச்சாராய வியாபாரிகளின் அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதாகவும் அதிரடியாகக் குற்றம் சாட்டிய அவர், பாஜக-விலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதனால் காங்கிரஸ் தரப்பு பெரும் உற்சாகத்தில் இருந்தது.

​ஆனால், இந்த உற்சாகம் அடுத்த இரண்டு மணி நேரத்திற்குக்கூட நிலைக்கவில்லை. காங்கிரஸ் கட்சியில் இணைந்த சில நிமிடங்களிலேயே தனது முடிவை மாற்றிக்கொண்ட சேஜல், மீண்டும் தனது ‘தாய்க் கழகமான’ பாஜக-விற்கே திரும்பி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். எதற்காக விலகினார், எதற்காக மீண்டும் மின்னல் வேகத்தில் இணைந்தார் என்ற காரணமே தெரியாமல் குஜராத் அரசியல் வட்டாரம் தற்பொழுது குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது. இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.