ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் அருகே உள்ள டபுவா காலனியில், குடும்ப உறவுகளுக்கிடையே ஏற்பட்ட மோதல் ஒரு கொடூரமான கொலை முயற்சியில் முடிந்துள்ளது.
ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வரும் பிங்கி என்ற பெண், தனது இரண்டு கணவரின் அண்ணன் மனைவிகள் சீமா மற்றும் மீனா ஆகியோர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் அப்பகுதியையே அதிர வைத்துள்ளது.
கடந்த ஏப்ரல் 3-ம் தேதி, சீமா மற்றும் மீனாவின் வீட்டிற்குச் சென்ற பிங்கிக்கு, அவர்கள் இருவரும் அன்புடன் தேநீர் கொடுத்து உபசரித்துள்ளனர்.
ஆனால், பிங்கியின் மனதிலோ கொலைவெறித் திட்டம் தீட்டப்பட்டிருந்தது. ஒரு பையில் மறைத்து எடுத்து வந்த பெட்ரோலை குளியலறையில் பதுக்கி வைத்த பிங்கி, மாலை 5 மணி அளவில் மாடியில் அவர்கள் நின்றிருந்தபோது, அந்தப் பெட்ரோலை அவர்கள் மீது ஊற்றித் தீ வைத்துள்ளார்.
தற்போது உடல் கருகிய நிலையில் இருவரும் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
போலீஸாரின் விசாரணையில், “அவர்கள் இருவரும் அடிக்கடி எனது நடத்தையைத் (Character) தவறாகப் பேசி அவமானப்படுத்தினர், அதற்குப் பழிவாங்கவே இப்படிச் செய்தேன்” என்று பிங்கி வாக்குமூலம் அளித்துள்ளார்.
பி.எஸ்சி, பி.எட் எனப் பட்டம் பெற்ற ஒரு ஆசிரியை இவ்வளவு கொடூரமான செயலில் ஈடுபட்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
