சின்னத்திரை உலகில் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி வரும் நடிகர் நாஞ்சில் விஜயன், தற்போது திருநங்கை ஒருவரால் தனக்கு மிரட்டல் விடுக்கப்படுவதாகக் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாகச் சமூக வலைதளங்களில் தன்னை பற்றித் தவறான தகவல்களையும், மார்பிங் செய்யப்பட்ட வீடியோக்களையும் அந்தத் திருநங்கை பரப்பி வருவதாக நாஞ்சில் விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்துப் பேசிய அவர், அந்தத் திருநங்கைக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், தன்னை அசிங்கப்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு திட்டமிட்டுப் பழிவாங்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும், அந்தத் திருநங்கை தனது வக்கீலுடன் சேர்ந்து கொண்டு தன்னை மிரட்டுவதாகவும், இதனால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே பலமுறை பஞ்சாயத்துகளில் சிக்கிய நாஞ்சில் விஜயன், இப்போது மீண்டும் ஒரு புகாரோடு போலீஸ் நிலையம் ஏறியிருப்பது சின்னத்திரை வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
