பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைத்த ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தின் இயக்குநர் சிதம்பரம் எஸ். பொதுவால் மீது அண்மையில் இளம் பெண் ஒருவர் பரபரப்பான பாலியல் புகாரை அளித்திருந்தார்.

இந்த விவகாரம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தன் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற அச்சத்தில் சிதம்பரம் எஸ். பொதுவால் எர்ணாகுளம் அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்த எர்ணாகுளம் அமர்வு நீதிமன்றம், அவருக்கு முன்ஜாமீன் வழங்கி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த பாலியல் புகார் தொடர்பான விசாரணையில் இந்த முன்ஜாமீன் அவருக்கு ஒரு தற்காலிக நிம்மதியைத் தந்துள்ளதாகக் கருதப்படுகிறது.