தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து அதிமுகவில் மீண்டும் சேர பலகட்ட முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். இருப்பினும் எடப்பாடி பழனிச்சாமி அவரைக் கட்சியில் சேர்க்க முடியாது என திட்டவட்டமாக கூறிவிட்டார்.

இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய ஓபிஎஸ் சமீபத்தில் திமுகவில் இணைந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியுள்ள நிலையில் இன்று மதுரையில் ஓபிஎஸ் தாய் கழகத்தில் திரும்பும் விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த விழாவில் ஓபிஎஸ் பேசும்போது, எம்ஜிஆரின் அதிமுக இன்று அபகரிப்பு திமுகவாக மாறி உள்ளது. அதிமுகவின் பழிவாங்கப்பட்ட எனக்கு அரவணைப்பு தந்தவர் முதல்வர் ஸ்டாலின்.

துரோகத்தால் பழிவாங்கப்பட்ட என்னை அன்போடு, பண்போடு பாசம் காட்டி அரவணைத்தவர் முதல்வர் ஸ்டாலின். அம்மாவின் அரவணைப்பை எனக்கும் என்னை சார்ந்தவர்களுக்கும் தளபதி வழங்கியுள்ளார் என்று கூறினார். மேலும் திராவிட மற்றும் சமூக நீதிக் கொள்கைகளை 75 வருடங்களாக பின்பற்றும் ஒரே கட்சி திமுக தான் என்றும் கூறினார்‌.