நொய்டாவைச் சேர்ந்த விஸ்வாஸ் வர்மா என்பவர், தான் தினமும் உடற்பயிற்சி செய்யச் செல்லும் ஜிம் (Gym) அருகே ஒரு காலி கடை இருப்பதைப் பார்த்தார். உடற்பயிற்சி முடித்து வருபவர்களுக்கு ஆரோக்கியமான உணவுகளை வழங்கலாம் எனத் திட்டமிட்ட அவர், தனது நண்பருடன் சேர்ந்து ஜூஸ் மற்றும் முட்டை கடையைத் தொடங்கினார்.

 

View this post on Instagram

 

A post shared by Vishwas Verma (@gptnlife)

கடை வாடகை வெறும் 10,000 ரூபாய் என்பதால் லாபம் ஈட்டிவிடலாம் என நினைத்தார். ஆனால், அன்னாசிப் பழத்தின் விலை தினமும் மாறுபட்டதால் ஒரு கிளாஸ் ஜூஸ் 90 ரூபாய்க்கு விற்ற பிறகும் லாபம் கிடைக்கவில்லை.

5 ரூபாய்க்கு முட்டை வாங்கி 10 ரூபாய்க்கு விற்கலாம் எனத் திட்டமிட்டார். ஆனால் சந்தையில் முட்டை 8 ரூபாய்க்கு விற்கப்பட்டதோடு, வேகவைக்கும்போது பல முட்டைகள் உடைந்ததால் அதிலும் நஷ்டம் ஏற்பட்டது.

வாடகை குறைவாக இருந்ததற்கு முக்கிய காரணமே அந்தக் கடை தரைத்தளத்தில் (Basement) மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இருந்ததுதான்.