நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கி வரும் ‘சிக்மா’ திரைப்படத்தின் டீசர், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் பரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், அன்புதாசன், யோக் ஜேபி, சம்பத் ராஜ், கிரண் கொண்டா, மகாலட்சுமி சுதர்சனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘சிக்மா’ திரைப்படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அதேசமயம், ஜேசன் சஞ்சயின் தயாரிப்பு நிறுவனமான ஜேஎஸ்கே மீடியாவும் இணைந்து தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.

படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அதன்படி, தற்போது டீசர் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அடுத்தடுத்து படத்தின் பாடல்கள் மற்றும் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.