சாதாரண திருமணங்களில் மணமக்கள் மீது மட்டுமே கவனம் இருக்கும் நிலையில், மணமகளின் தாயார் ஒருவரின் உற்சாகமான நடன நிகழ்ச்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. திருமணம் நடக்கும் மண்டபத்திற்கு மணமகன் ஊர்வலம் வந்தபோது, மணமகளின் தாயார் மேடையில் ஏறி சினிமா பாடலுக்கு திடீரென நடனமாடத் தொடங்கினார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Bolly Garage | Wedding Choreography (@bollygarageweddingchoreography)

அவருடைய முகத்தில் இருந்த புன்னகை, அசைவுகளில் இருந்த நம்பிக்கை மற்றும் ஆற்றல் ஆகியவை பார்ப்பவர்களை வெகுவாகக் கவர்ந்தது. அவருடைய நடனத்தைக் கண்டு மணமகனும் புன்னகை மாறாமல் ரசித்துள்ளார். இந்த மறக்க முடியாத தருணத்தின் போது, மணமகளின் தாயாரின் உற்சாகம் மற்றும் உணர்ச்சிகரமான வெளிப்பாடுகள் பார்வையாளர்களைத் தன்பால் ஈர்த்தன.

அவருடைய நடனத்திற்கு உறவினர்கள் பலரும் எழுந்து கைதட்டியதோடு, சிலர் அவருடன் சேர்ந்து உற்சாகமாக நடனமாடியதும் இந்த நிகழ்வை மேலும் சிறப்புடையதாக்கியது. மணமகன் வீட்டார் கூட, இத்தகைய கலகலப்பான கொண்டாட்டத்தை முதன்முதலாகப் பார்ப்பதாகக் கூறி மகிழ்ந்தனர். இந்த காணொளி, மில்லியன் கணக்கான பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.