இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகும் ‘திரௌபதி 2’ திரைப்படத்தின் ‘எம்கோனே’ என்ற பாடலை, பிரபலப் பாடகி சின்மயி பாடியுள்ளார்.

இப்பாடல் இன்று மாலை வெளியானது. இதற்கிடையில், மோகன் ஜியின் படத்தில் பாடியதற்காகச் சின்மயிக்கு எதிராக இணையத்தில் விமர்சனங்கள் எழுந்தன. இந்த விமர்சனங்கள் காரணமாகப் பாடகி சின்மயி, தான் பாடியதற்காக மன்னிப்புக் கோரியுள்ளார்.

சின்மயி மன்னிப்புக் கேட்ட நிலையில், இயக்குநர் மோகன் ஜி தனது சமூக வலைத்தளத்தில் ஒரு பரபரப்பானப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “என்னுடன் ‘திரௌபதி 2’ படத்தில் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள், நடிகைகள் அல்லது யாரையும் குறிவைத்துத் தாக்க வேண்டாம்.

என் படம் பேசுவது என் சொந்தச் சிந்தனை. என்னுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இணைந்து பணியாற்றும் எந்த நபரையும் குறிவைத்துத் தாக்குவது கோழைத்தனம் ஆகும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.