மகாராஷ்டிரா மாநிலத்தில், பிறந்து வெறும் 20 நாட்களே ஆன பச்சிளங் குழந்தையை, அதன் 22 வயதான தாயே ஆற்றில் வீசிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண், கடந்த நவம்பர் 17-ஆம் தேதி குழந்தையை ஆற்றில் வீசிய பின்னர், குழந்தை மாயமாகிவிட்டதாகக் கூறிப் போலீசாரிடம் நாடகமாடிப் புகார் அளித்துள்ளார்.

குழந்தை மாயமானதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின்போது, அந்தத் தாய் உண்மையை ஒப்புக்கொண்டார். “நான் சுதந்திரமாக வாழ விரும்பினேன், அதற்கு இந்தக் குழந்தை தடையாக இருந்தது” என்று அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து, ஆற்றில் வீசப்பட்ட குழந்தையின் உடல் மீட்கப்பட்டது. இந்தச் சோகமான சம்பவத்தைத் தொடர்ந்து, பெற்ற குழந்தையைக் கொடூரமாக ஆற்றில் வீசிய அந்தப் பெண் கைது செய்யப்பட்டார்.