திரைத்துறை மற்றும் அரசியலில் பிரபலமான நடிகர் நெப்போலியன், தனது மூத்த மகன் தனுஷுக்கு ஏற்பட்ட தசை சிதைவு நோய் (Muscular Dystrophy) காரணமாக அனைத்தையும் விட்டு விலகி அமெரிக்காவில் குடியேறியவர்.
கடந்த ஆண்டு, இவருடைய மூத்த மகன் தனுஷுக்கும், தமிழகத்தைச் சேர்ந்த அக்ஷயா என்ற பெண்ணுக்கும் ஜப்பானில் மிகப்பிரமாண்டமாகத் திருமணம் நடைபெற்றது. அமெரிக்காவில் இருந்து விமானம் மூலம் பயணிக்க முடியாத தனது மகனுக்காகக் கப்பல் மூலம் ஜப்பான் சென்று, நடிகர் சரத்குமார், ராதிகா, மீனா உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் மத்தியில் நெப்போலியன் இந்தத் திருமணத்தை கோலாகலமாக நடத்தினார்.

இந்தத் திருமணத்தின்போது, தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் திருமண வாழ்க்கை வாழ முடியாது என்று சமூக வலைதளங்களில் ஒரு தரப்பினர் விமர்சித்தபோதும், அதற்குச் செவிசாய்க்காமல் நெப்போலியன் தன் மகனுக்குத் திருமணம் செய்து வைத்ததை மற்றொரு தரப்பினர் பாராட்டி வாழ்த்தினர்.
விமர்சனங்களுக்கு மத்தியில், தனுஷ் – அக்ஷயா தம்பதியினர் தங்கள் திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் கழித்து வருகின்றனர். சமீபத்தில் இவர்கள் தங்கள் தலை தீபாவளியைக் கொண்டாடிய புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகின.
View this post on Instagram
“>
இந்த நிலையில், நடிகர் நெப்போலியனின் மகன் தனுஷ் – அக்ஷயா தம்பதியினர் தங்கள் முதலாம் ஆண்டு திருமண நாள் விழாவை அமெரிக்காவில் உள்ள இல்லத்தில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளனர்.
இந்த விசேஷத்தின்போது மாலை மாற்றி, கேக் வெட்டிக் கொண்டாடிய காணொளியை நடிகர் நெப்போலியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, உருக்கமான மகிழ்ச்சியான பதிவொன்றையும் பகிர்ந்துள்ளார். இந்தக் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
