மேற்கு வங்கத்தின் ஹூக்ளி மாவட்டம் தாரகேஷ்வரில், பன்சாரா சமூகத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமி கடத்தப்பட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தாரகேஷ்வர் ரயில் நிலையம் அருகே தாற்காலிகமாகத் தங்கியிருந்த குடும்பத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமி, இரத்தக் காயம் மற்றும் கவலைக்கிடமான நிலையில் சனிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக, சிறுமியின் தாத்தா ராஜு தாஸ் (45) என்பவரைத் தாரகேஷ்வர் போலீஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலையில் இந்தக் கொடூரம் அரங்கேறியுள்ளது. சிறுமியின் குடும்பத்தினர் அளித்த தகவலின்படி, அவர்கள் உறங்கிக்கொண்டிருந்தபோது ‘தீயவர்கள் கொசுவலையைக் கிழித்து’ உறங்கிக்கொண்டிருந்த சிறுமியைக் கடத்திச் சென்றுள்ளனர்.
சிறுமியைத் தீவிரமாகத் தேடிய குடும்பத்தினர், அன்றைய பிற்பகல் நேரத்தில் தாரகேஷ்வர் ரயில்வேயின் வடிகால் அருகே சிறுமியைப் படுகாயங்களுடன் கண்டெடுத்து, உடனடியாக தாரகேஷ்வர் கிராமப்புற மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர்.
মমতা বন্দ্যোপাধ্যায়-এর বিভীষিকাময় পৈশাচিকতার রাজত্বে চার বছরের শিশুকন্যাও সুরক্ষিত নয়!
হুগলীর তারকেশ্বরের বাসিন্দা চার বছর বয়সী ছোট্ট একটি শিশুকন্যাকে ঘর থেকে ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা। অপহরণের দীর্ঘ সময় পর… pic.twitter.com/E9gzZHwgC6
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) November 8, 2025
“>
பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பம் பன்சாரா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் ஜார்க்கண்ட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹூக்ளி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் கமனசிஷ் சென் (IPS) இந்தச் சம்பவம் மற்றும் சிறுமியின் சமூகப் பின்னணியை உறுதிப்படுத்தியதுடன், இந்த வழக்கில் போக்சோ சட்டத்தின் (POCSO Act) பிரிவு 6-இன் கீழ் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
