வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகாவைச் சேர்ந்த 50 வயது விவசாயி ஒருவர், கடந்த ஆகஸ்டு மாதம் ஆன்லைன் முதலீடு தொடர்பான வாட்ஸ்அப் குரூப்பில் இணைந்தார்.
அதில் இருந்த மர்ம நபர்கள், ஆன்லைனில் முதலீடு செய்தால் ‘அதிக லாபம் கிடைக்கும்’ என்று ஆசை வார்த்தை கூறிப் பதிவிட்டதை அந்த விவசாயி உண்மை என்று நம்பினார். இதனைத் தொடர்ந்து, தனது ஆன்லைன் கணக்கில் அவர் ரூ.20 லட்சத்து 11 ஆயிரத்தை முதலீடு செய்துள்ளார். முதலீட்டிற்குப் பதிலாக ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கமிஷனாக வந்திருந்த நிலையில், விவசாயி தான் முதலீடு செய்த முழுப் பணத்தையும் எடுக்க முயன்றபோது அதனை எடுக்க முடியவில்லை.
நண்பர்களிடம் விசாரித்தபோது, அதிக லாபம் எனக் கூறி மர்ம நபர்கள் மொத்தம் ரூ.18 லட்சத்து 71 ஆயிரத்தை மோசடி செய்தது தெரியவந்தது. இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
