ஐ.சி.சி. மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்தியா முதல் முறையாகக் கோப்பையை வென்று வரலாறு படைத்தது.

இந்த உற்சாகக் கொண்டாட்டத்தின் போது, நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் இருந்த இளம் சிறுமி ஒருவர் அளித்த பேட்டி, இணையத்தில் தீயாகப் பரவி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்திய அணியின் வெற்றி குறித்து அந்தச் சிறுமி மேற்கத்திய உச்சரிப்பில் (Western Accent) மிகவும் சரளமாகவும், ஆழமான கருத்துக்களுடனும் ஆங்கிலத்தில் பேசியது சமூக வலைதளப் பயனர்களைக் கடுமையாகக் கவர்ந்துள்ளது.

“>

 

“இந்த வெற்றியை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. இன்று விளையாடிய ஒவ்வொரு வீராங்கனையும் தங்கள் சிறந்த பங்களிப்பை அளித்தனர். தீப்தி ஷர்மாவுக்கும் ஷஃபாலி வர்மாவுக்கும் தான் முழுப் பாராட்டும் செல்லும், அவர்கள் அற்புதமாக விளையாடினர்” என்று அந்தச் சிறுமி தன்னம்பிக்கையுடன் பேசினார்.

நீண்ட காத்திருப்புக்குப் பிறகு கிடைத்த இந்தப் பெருமைமிகு தருணத்தைக் குறித்து மேலும் பேசிய அவர், “நீங்கள் என் இடத்தில் இருந்தால் என்ன நினைப்பீர்கள்? நீங்களும் உணர்ச்சிவசப்படுவீர்கள். இந்த அணி காட்டிய பொறுமை, அர்ப்பணிப்பு மற்றும் அன்பு அசாதாரணமானது” என்று உணர்ச்சிப்பூர்வமாகக் கூறினார்.

இந்தச் சிறுமியின் சரளமான ஆங்கிலப் பேச்சும், விளையாட்டு குறித்த அவரது தெளிவான பார்வையும் இணையத்தில் பலரால் பாராட்டப்பட்டு, வைரல் கிட் என்று அழைக்கப்படுகிறது