தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம், ஜெனராபாத் – பிஜாப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை கோர விபத்து நிகழ்ந்துள்ளது.

சுமார் 70 பயணிகள் பயணித்துக் கொண்டிருந்த அரசுப் பேருந்து, ஜல்லிக் கற்கள் ஏற்றி வந்த திப்பர் லாரி ஒன்றுடன் பயங்கரமாக நேருக்கு நேர் மோதியது. இந்தச் சம்பவ இடத்திலேயே பேருந்தில் பயணித்த 17 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, அருகில் உள்ள செவெல்லா அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டனர். இந்தச் சாலை விபத்து காரணமாகத் தெலுங்கானாவில் பெரும் சோகமும், பரபரப்பும் நிலவுகிறது.